Saturday, January 3, 2015

நேற்று அவள் இருந்தாள்!

நேற்று அவள் இருந்தாள்!

"தண்டவாளம் அருகே வீடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்!
இதமான தென்றல் காற்றில், ரயிலின் horn ஓசை கூட புல்லாங்குழலாய் இனிக்கும் என!

அன்றும் என் கொள்ளை பக்கத்தில் ரயிலின் ஓசையை கேட்ட படி தென்றல் காற்றை ரசித்துக் கொண்டு இருந்தேன். நடக்க போகும் நல்ல காரியங்களை மனத்தில் அசை போட்ட படி.

தூரத்தில் தெரியும் மின் கம்ப ஒளியில்,
ஒரு ஆணும் பெண்ணும், பேசி கொண்டு இருந்தனர்...

அவள் அவனை விட்டு என்னை நோக்கி ஓடி வருகிறாள்!
எனக்கு அடையாளம் தெரிந்து விட்டது.

பூத நிழல் முதலில் வந்ததால்,
நான் சுதாரித்து நிற்க நேரம் சரியாக இருந்தது!

அவள், 
நான் ஏறெடுத்து பார்த்த முதல் அழகி,
என் மனைவி...
யாரோ ஒரு ஆண் மகனிடம்,
கலந்து உரையாடி விட்டு வந்து சொன்னாள்!

"அவனின்றி நான் இல்லை" என!

உடைந்து போனேன்... 
சாந்தி முகூர்த்தம் இன்னும் சில நேரத்தில்...

இவ்வளவு நேரம் இதமாய் இருந்த குளிர் காற்று
ஏனோ ஊசியாய் குத்த ஆரம்பித்தது!

நான் இரண்டு நிமிடம் மௌனித்தேன்!

காரணம் சொல்ல அவள் தயாராய் இல்லை...
கேட்க எனக்கும் தெம்பு இல்லை...

பட படடப்பாய் துடித்த இதயத்தை
சீரான ஒட்தத்துக்கு கொண்டு வந்து...

போகும் போது கதவை தாழிட்டு போ என்றேன்!

புறப்படும் முன்...
அவள் இரண்டு நிமிடம் அங்கேயே நின்றாள்..
மௌன சிலையாய்.

ஏதோ கேட்க நினைக்கிறாள்...
வார்த்தை வர வில்லை...

நான் கேட்பேன் என நினைக்கின்றால்...
எனக்கும் தெரிகிறது...

எதை நான் கேட்க???

அவள் பாதம், என் பதில் எதிர்பார்த்து
அவன் பக்கம் திரும்ப மறுக்கின்றது!
போராடி அதை திருப்ப பார்க்கிறாள்!
வெற்றியும் கொண்டாள்!

என் தொண்டைகுழி எச்சில் விழுங்குது!
கேட்க நினைக்கும் வார்த்தைகள் அதில் முங்கி இறக்குது!

சிறிது நேர போராட்டத்தில், 
சிக்கி தவித்து விட்டு...
ஏதும் சொல்லாமலே... நிழல் சுருங்கி அவன் அருகில் சென்று விட்டாள்.

அந்த சில நிமிட போராட்டம்,
அழகானாது!

ஒரு வேலை இது தான் காதலோ?

திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில் எனது
இந்த 35 வருட காத்திருப்புக்கு காரணம் அந்த சில நிமிடங்கள் தான்."

இறந்து போன பக்கத்து வீடு தாத்தாவின் கடைசி எழுத்துக்கள்...

விதியா... இல்லை... எதேச்சையா என தெரியவில்லை...

நாளை என் காதலிக்கு கல்யாணம்!
"இரவில் வா... கூட்டி போ" என அவள் அனுப்பிய தூது குறிப்பு ஒரு கையில்!
தாத்தாவின் ஆவி அதை பறிக்க முயன்றது போல் ஒரு பிம்பம்!

இடிந்து போனேன்!



தொடரும்...

1 comment:

Shiny said...

Very nice Santy...Nice to c u
Back in action